JW subtitle extractor

எல்லா விதமான வணக்கத்தையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?

Video Other languages Share text Share link Show times

நிறைய பேர், ‘நாம எந்த மதத்துல இருந்தாலும் பரவால,
எல்லா மதங்களும் ஒரே இடத்துக்கு போய் சேர்ற
வேறவேற பாதைகள் மாதிரி’னு சொல்றாங்க
‘எந்த பாதையில போனாலும்
கடவுளோட ஆசீர்வாதம் கிடைக்கும்’னு சொல்றாங்க
ஆனா அது உண்மையா இருக்க முடியுமா?
எல்லா விதமான வணக்கத்தையும் கடவுள் ஏத்துக்குறாரா?
வணக்கத்த ரெண்டு விதமான பாதைகளுக்கு பைபிள் ஒப்பிடுது
ஒண்ணு, விசாலமான பாதை
நிறைய பேர் அதுல போறாங்க
இன்னொன்னு, குறுகலான பாதை
சில பேர்தான் அத கண்டுபிடிக்கிறாங்க
குறுகலான பாதை மட்டும்தான் உண்மை வணக்கத்த குறிக்குது
அதுல போறவங்களுக்கு முடிவில்லாத வாழ்க்கையும்,
இன்னும் நிறைய ஆசீர்வாதங்களும் கிடைக்கும்
ஆனா, நாம சரியான பாதையிலதான் போறோமான்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்?
ஒரு இடத்துக்கு போக உங்களுக்கு வழி தெரியலன்னு வச்சுக்கோங்க
மத்தவங்ககிட்ட கேட்டு பார்க்கிறீங்க
ஒருத்தங்க நீங்க வலது பக்கமா போகணும்னு சொல்றாங்க
இன்னொருத்தங்க நீங்க இடது பக்கமா போகணும்னு சொல்றாங்க
ஆனா மூணாவதா ஒருத்தங்க,
ஒரு வரைபடத்த காட்டி, நீங்க நேரா போகணும்னு சொல்றாங்க
யார் சொல்றத நீங்க நம்புவீங்க?
பைபிள் அந்த வரைபடம் மாதிரி இருக்கு
என்ன செஞ்சா கடவுளோட ஆசீர்வாதம் கிடைக்கும்னு அது சொல்லுது
அப்படியிருக்கறப்போ, ஏன் ஆளாளுக்கு ஒவ்வொண்ணு சொல்லிட்டு இருக்காங்க?
உதாரணத்துக்கு, மனுஷன் இறந்ததுக்கு அப்புறம்
அவனோட ஆத்துமா மட்டும் வேற எங்கேயோ போய் வாழ்றதா
நிறைய மதங்கள் சொல்லுது
இன்னும் சில மதங்கள்,
அந்த ஆத்துமா வேறொரு மனுஷனாவோ
மிருகமாவோ
மரம் செடிகொடியாவோ மறுபிறவி எடுக்கறதா சொல்லுது
இந்த மாதிரி நிறைய விஷயங்கள்ல
ஒவ்வொரு மதமும் ஒவ்வொண்ணு சொல்லுது
அப்படீன்னா, எல்லா மதங்கள் சொல்றதும் உண்மையா இருக்க முடியுமா?
பைபிள்-ங்கற வரைபடத்த பொறுத்தவரைக்கும்,
இறந்தவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது
சீக்கிரத்துல, கடவுள் அவங்கள மறுபடியும் உயிரோட கொண்டுவர போறாரு
நீதிமான்கள் இந்த பூமியில என்னென்னைக்கும் வாழ்வாங்க
சரி, இத பத்தி பைபிள் தெளிவா சொல்லுது
ஆனா, மத்த விஷயங்கள பத்தி?
உதாரணத்துக்கு, நம்ம நடத்தைய பத்தி அது என்ன சொல்லுது?
கடவுளுக்கு பிடிக்காத மாதிரி நாம நடந்துகிட்டா
நாம எந்த மதத்துல இருந்தாலும் சரி
பிரயோஜனம் இல்லாம போயிடும்
இன்னைக்கு ஆட்கள் எப்படி இருப்பாங்கன்னு பைபிள் சொல்லுது
நிறைய பேர் ‘சுயக்கட்டுப்பாடு இல்லாம,
கொடூரமா,
நல்ல காரியங்கள விரும்பாம’ இருப்பாங்கன்னு சொல்லுது
அதேசமயத்துல, உண்மை வணக்கத்துல இருக்கறவங்க
மத்தவங்களோட சமாதானமா இருப்பாங்கன்னு பைபிள் சொல்லுது
அவங்க எல்லார்கிட்டயும் மரியாதையா பேசுவாங்க
நல்ல விதமா நடந்துக்குவாங்க
அப்படீன்னா, கடவுள் எல்லா மதங்களயும் ஏத்துக்குறது இல்ல
ஒரேவொரு வணக்கத்த மட்டும்தான் அவரு ஏத்துக்குறாருன்னு பைபிள் சொல்லுது
உண்மை வணக்கத்துல இருக்குறவங்களுக்கு கடவுளோட நல்ல பந்தம் இருக்கும்
சாவே இல்லாத வாழ்க்கையும் கிடைக்கும்
‘உண்மை வணக்கத்த நான் எப்படி கண்டுபிடிக்கிறது’னு யோசிக்கிறீங்களா?
இந்த கேள்விக்கும் மத்த கேள்விகளுக்கும்
கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!-ங்கற சிற்றேட்டோட
10-வது பாடத்துல பதில் இருக்கு
நீங்க அத jw.org வெப்சைட்டுல இருந்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்
பைபிள் விஷயங்கள உங்களுக்கு சொல்லித்தர
யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமா இருக்காங்க
பைபிள் படிப்புக்கான ஆன்லைன் கூப்பன பூர்த்தி செய்யுங்க
உங்க பகுதியில இருக்குற யெகோவாவின் சாட்சிகள்
உங்களுக்கு வசதியான நேரத்துலயும் இடத்துலயும்
உங்கள வந்து சந்திப்பாங்க