JW subtitle extractor

எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்பாரா?

Video Other languages Share text Share link Show times

கடவுள் ‘ஜெபத்த கேட்கிறவர்’னு பைபிள் சொல்லுது.
நீங்க மனசுக்குள்ள வேண்டிக்கறதக்கூட அவரால கேட்க முடியும்.
எப்படி?
நம்மளோட ஜெபத்த கேட்கறவர்தான் எல்லா உயிர்களயும் படைச்சவர்.
மனுஷங்களோட மனசு எப்படி வேலை செய்யும்னு அவருக்கு நல்லா தெரியும்.
ஏன்னா அத வடிவமைச்சதே அவர்தான்.
அதனால, நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு அவரால தெரிஞ்சுக்க முடியும்,
மனசுல நீங்க செய்ற ஜெபத்தக்கூட அவரால கேட்க முடியும்.
இந்த உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் சரி,
யெகோவா தேவன் உங்கமேல அக்கறையா இருக்காரு.
எந்த பாஷைய நீங்க பேசுனாலும் அவர் அத புரிஞ்சுக்குறாரு.
ஆனா, எல்லா ஜெபங்களையும் அவரு ஏத்துக்குறாரா?
வேலை செய்ற ஒருத்தர் திருடுறத ஒரு முதலாளி பார்த்துடுறாருன்னு வெச்சுக்கோங்க.
அவர் நேரடியா போய் கேட்குறாரு.
வேலை செய்றவரு, முதல்ல திருடலன்னு பொய் சொல்றாரு,
அப்புறம் திருடுனதுக்கு ஏதோ சாக்குப்போக்கு சொல்றாரு.
அந்த பொய்யையும் சாக்குப்போக்கையும் அந்த முதலாளி கேட்டாலும்,
அதயெல்லாம் அவர் ஏத்துக்குறது இல்ல.
அதே மாதிரிதான் கடவுள் எல்லா ஜெபங்களயும் ஏத்துக்குறது இல்ல.
ஒருவேளை, சுயநலத்துக்காக ஒருத்தர் கடவுள்கிட்ட எதையாவது கேட்கலாம்.
இன்னொருத்தர், வீட்டுல மனைவிய கொடுமைப்படுத்திட்டு,
அடுத்த நாள் கடவுள்கிட்ட ஆசீர்வாதம் கேட்டு வேண்டிக்கலாம்.
ஒருவேள, ஒரு நாட்டோட ராணுவ வீரர்கள் எதிரிகள அழிக்கறதுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கலாம்.
எதிரி நாட்டு வீரர்களும் அதையே செய்யலாம்.
இவங்களோட வேண்டுதல எல்லாம் கடவுள் கேட்பாரா?
கடவுளுக்கு பிடிக்காத விஷயங்களுக்காக நாம ஜெபம் பண்ணுனா
கண்டிப்பா அவரு கேட்க மாட்டாரு.
ஆனா, நீங்க மனசார வேண்டிக்கிட்டா கடவுள் கேட்பாரு.
நீங்க தப்பு செஞ்சிருந்தாகூட, அவர்கிட்ட நெருங்கி வர ஆசைப்பட்டீங்கன்னா...
மன்னிப்பையும் நல்ல புத்தியையும் கேட்டு வேண்டிக்கிட்டீங்கன்னா...
அவர் உடனே கேட்பாரு.
அவருக்கு பிரியமா நடக்க முயற்சி செய்யறவங்களோட ஜெபங்கள அவர் நிச்சயமா கேட்பாரு.
ஆனா, நீங்க எப்படி ஜெபம் செய்யணும்?
கடவுளோட நண்பரா ஆகுறதுனால உங்களுக்கு என்ன நன்மை?
இந்த கேள்விகளுக்கு, “கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி”ங்கற சிற்றேட்டோட
12-வது பாடத்துல பதில் இருக்கு.
நீங்க அத jw.org வெப்சைட்டுல இருந்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்.
பைபிள் விஷயங்கள உங்களுக்கு சொல்லித்தர யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமா இருக்காங்க.
பைபிள் படிப்புக்கான ஆன்லைன் கூப்பன பூர்த்தி செய்யுங்க.
உங்க பகுதியில இருக்குற யெகோவாவின் சாட்சிகள்
உங்களுக்கு வசதியான நேரத்துலயும் இடத்துலயும் உங்கள வந்து சந்திப்பாங்க.