JW subtitle extractor

JW பிராட்காஸ்டிங்—ஜூலை 2026

Video Other languages Share text Share link Show times

வாழ்வும் இல்லை, வழியும் இல்லை.
என் மூச்சை சுமக்கவும் ஜீவன் இல்லை.
என் சோகத்தை எங்கே போய் சொல்வேன்,
ஓர் மீனின் கண்ணில் கண்ணீர் அதை காண்பார் யாரோ?
வா, நீ செய்யும் ஜெபம்,
என் நெஞ்சில் தேன் வார்க்கும்.
வா, என் தோழா வந்து நீ பாசம் காட்டு,
மாறிப் போகும் சோகம், நீ மாத்திக் காட்டு.
தேவன் அன்பை சொல்லி, நீ அன்பு காட்டு,
என்ன வந்தாலும் நாம்... என்றும் சேர்ந்திருப்போம்.
ஒன்றாய் இருப்போம்.
வந்தேன் நண்பா, கலங்காதே நீயும்.
சாம்பல் ஆன காடும் மீண்டும் பூக்கும்.
தன் பேரன்பால், யெகோவா தாங்க,
உந்தன் சோகம் மாறும் நீயும் வாழ்வாய் என்றும்!
வந்தேன், நான் செய்வேன் ஜெபம்,
உன் நெஞ்சில் தேன் வார்ப்பேன்.
வந்துவிட்டேன் தோழா, என் பாசம் காட்ட,
உந்தன் சோகம் மாத்தி, என் நேசம் காட்ட,
நண்பர் கூட்டம் உண்டு, நம் தேவன் உண்டு,
என்ன வந்தாலும் நாம்...
வந்துவிட்டேன் தோழா, என் பாசம் காட்ட,
உந்தன் சோகம் மாத்தி, என் நேசம் காட்ட,
நண்பர் கூட்டம் உண்டு, நம் தேவன் உண்டு,
என்ன வந்தாலும் நாம்...
ஒன்றாய் சேர்ந்திருப்போம்.
எந்நாளும்...
ஒன்றாய் இருப்போம்...
எந்நாளும்...