JW subtitle extractor

JW பிராட்காஸ்டிங்—அக்டோபர் 2026

Video Other languages Share text Share link Show times

எங்கே என் சொந்தங்கள்
என்றே மனம் ஏங்கும்போதெல்லாம்
நம்பிக்கை தரும் நண்பர்கள்
துணையாய் நின்று தாங்குவார்களே!
இன்னும் கொஞ்ச நேரம் க்றிஸ்துவின் குரல் கேட்டு
எழும் சொந்தங்கள் இனி நம் கூடவே
நிஜமாகவே
வரவேற்போமே நாம்
எழுந்தே வரும் சொந்தங்களை நாம் மீண்டும் பார்ப்போமே.
தினமும் ஒரு ஞாபகம்
இதயம் நொறுங்கும் அந்நேரத்தில்
நம் யெகோவா தேற்றுவார்
நிம்மதி தந்து அணைப்பாரே!
இன்னும் கொஞ்ச நேரம் க்றிஸ்துவின் குரல் கேட்டு
எழும் சொந்தங்கள் இனி நம் கூடவே
நிஜமாகவே
வரவேற்போமே நாம்
எழுந்தே வரும் சொந்தங்களை நாம் மீண்டும் பார்ப்போமே.
எல்லாமே மாறுமே விரைவிலே
அந்நாளில் கண்ணீர் இல்லையே.
அங்கே உன் அன்பை காண்பாயே,
ஆசை தீரவே அள்ளி அணைத்துக்கொள்வாயே
உன் காயம் எல்லாம் ஆறுமே, பூஞ்சோலை நிஜம் ஆகுமே!
இன்னும் கொஞ்ச நேரம் க்றிஸ்துவின் குரல் கேட்டு
எழும் சொந்தங்கள் இனி நம் கூடவே
நிஜமாகவே
வரவேற்போமே நாம்
எழுந்தே வரும் சொந்தங்களை
நாம் மீண்டும் பார்ப்போமே.
ஆம் மீண்டும் பார்ப்போமே.