யெகோவா மாறாத அன்பை எப்போதும் காட்டிவந்தார்
Video
Other languages
Share text
Share link
Show times
Hide times
00:00:02
இந்த உலகத்துல நம்ம எல்லாருக்குமே
கஷ்டங்கள் வருது.00:00:06
00:00:06
நீங்க எப்பவாவது,
‘யெகோவா எனக்கு உதவி செய்வாரா,00:00:09
00:00:09
எப்ப உதவி செய்வார்’
அப்படினெல்லாம் யோசிச்சிருக்கீங்களா?00:00:12
00:00:12
கஷ்டங்கள தாங்கிக்க
யெகோவா நமக்கு உதவி செய்வாருங்கறதுல00:00:16
00:00:16
சந்தேகமே இல்ல.00:00:17
00:00:17
ஏன்?00:00:18
00:00:18
ஏன்னா, யெகோவாவோட குணங்கள்லயே00:00:21
00:00:21
ரொம்ப ரொம்ப முக்கியமான,
அருமையான குணம், அன்புதான்.00:00:26
00:00:26
அன்ப பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கவும்,00:00:28
00:00:28
நாம எப்படி இந்த குணத்த
காட்டலாம்னு புரிஞ்சுக்கவும்,00:00:31
00:00:31
இப்ப யோசேப்போட கதைய பார்க்கலாம்.00:00:34
00:00:35
யோசேப்பு 3,700 வருஷங்களுக்கு முன்னாடி
மெசொப்பொத்தாமியாவுல பிறந்தாரு.00:00:41
00:00:41
அவரோட அப்பா பேரு யாக்கோபு.00:00:43
00:00:43
யாக்கோபுக்கு இஸ்ரவேல்-ங்கற பேரும் இருந்துச்சு.00:00:46
00:00:46
யோசேப்புக்கு பத்து அண்ணன்களும்,00:00:48
00:00:48
ஒரேவொரு தம்பி பென்யமீனும் இருந்தாங்க.00:00:51
00:00:52
சின்ன வயசுலேயே யோசேப்புக்கு
நிறைய கஷ்டம் வந்துச்சு.00:00:55
00:00:55
ஏன்னா, அவரோட பத்து அண்ணன்களும்00:00:58
00:00:58
பொறாமையினால
அவர கொடுமைப்படுத்துனாங்க.00:01:00
00:01:00
ஆனாலும், யோசேப்பு அதையெல்லாம்
தாங்கிக்கிட்டதுனால00:01:03
00:01:03
பிற்காலத்துல அவரோட முழு குடும்பத்தையும்00:01:06
00:01:06
பஞ்சத்துல இருந்து காப்பாத்த முடிஞ்சுது.00:01:08
00:01:08
அதுமட்டுமில்ல, நம்ம எல்லாருக்கும்கூட
அளவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகுது.00:01:14
00:01:14
இப்ப நாம எல்லாரும் நம்ம பைபிள திறந்து00:01:17
00:01:17
ஆதியாகமம் 37:2-11 வரைக்கும்
படிக்கலாம்.00:01:22
00:03:17
யோசேப்போட குடும்பத்துல இருக்குறவங்களால00:03:19
00:03:19
அந்த கனவுகளோட அர்த்தத்த ஏத்துக்க முடியல.00:03:21
00:03:21
ஆனாலும் யாக்கோபு,
யோசேப்பு சொன்ன விஷயங்கள,00:03:24
00:03:24
அதாவது அவரோட கனவுகள,
‘தன்னோட மனசுல வெச்சுக்குறாரு.’00:03:28
00:03:28
அப்படின்னா, அத பத்தி திரும்பத் திரும்ப
யோசிச்சிட்டே இருக்காரு.00:03:32
00:03:32
யெகோவாதான் யோசேப்புக்கு அந்த கனவுகள
வரவெச்சிருப்பாருன்னு அவருக்கு புரிஞ்சிருக்கலாம்.00:03:36
00:03:36
ஆனா, யோசேப்போட அண்ணன்கள் என்ன செய்றாங்க?00:03:40
00:03:40
ஆதியாகமம் 37:18-36 வரைக்கும்
இப்ப பார்க்கலாம்.00:03:47
00:07:11
நிலைமை எப்படி தலைகீழா
மாறிடுச்சுனு பார்த்தீங்களா!00:07:14
00:07:14
செல்ல மகனா இருந்தவர்
இப்ப அடிமையா ஆயிட்டார்!00:07:18
00:07:18
யோசேப்போட அண்ணன்கள்
அவர்மேல மட்டும் அன்பு காட்டாம போயிடல,00:07:21
00:07:21
அவங்க அப்பா யாக்கோபு மேலயும்
அன்பு காட்டாம போயிட்டாங்க,00:07:25
00:07:25
முக்கியமா அவங்களோட பரலோக தகப்பன்
யெகோவாமேலயும்தான்.00:07:29
00:07:29
யெகோவாவோட உண்மை ஊழியர்கள்கூட
அநியாயங்கள சந்திக்க வேண்டியிருக்கலாம்.00:07:34
00:07:34
சிலசமயம், நம்மளோட சகோதர சகோதரிகளே00:07:37
00:07:37
நமக்கு ஏதாவது அநியாயம் செஞ்சிடலாம்.00:07:40
00:07:40
நீங்க அந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலதான் இருக்கீங்களா?00:07:43
00:07:43
உண்மைல, இந்த சோதனைகள்லாம்,00:07:46
00:07:46
நீங்க யெகோவாமேல வெச்சிருக்குற அன்ப நிரூபிக்கறதுக்கு
அருமையான வாய்ப்பா இருக்கு.00:07:50
00:07:50
எப்படி சொல்லலாம்?00:07:52
00:07:52
இது மாதிரியான சூழ்நிலைல யோசேப்பு
எப்படி நடந்துகிட்டாருன்னு00:07:56
00:07:56
ஆதியாகமம் 39:1-23-ல பாருங்க.00:08:01
00:12:07
சிறையிலகூட யோசேப்ப யெகோவா
அக்கறையா பார்த்துக்கிட்டாரு.00:12:11
00:12:11
யோசேப்பு செஞ்ச எல்லாத்திலயும்
அவருக்கு வெற்றி தந்தாரு.00:12:15
00:12:15
யெகோவாவுக்கு ஏன் யோசேப்புமேல இவ்ளோ பாசம்?00:12:18
00:12:18
ஏன்னா யோசேப்பு, எந்த சூழ்நிலையிலயும்00:12:21
00:12:21
யெகோவாமேல வெச்சிருந்த அன்ப விடவே இல்ல.00:12:24
00:12:24
யோசேப்போட அனுபவத்துல இருந்து
நாம என்ன பாடம் கத்துக்குறோம்?00:12:28
00:12:28
நாம எப்பவும் யெகோவாமேல
அன்பு காட்டுனா00:12:31
00:12:31
அவர் நம்மள கைவிடவே மாட்டாரு.00:12:33
00:12:33
அதுக்கு பதிலா,00:12:34
00:12:34
சோதனைய சகிக்குறதுக்கு
நமக்கு என்ன தேவையோ00:12:38
00:12:38
அத சரியான நேரத்துல கொடுத்து, உதவி செய்வாரு.00:12:41
00:12:41
இப்ப மறுபடியும் யோசேப்போட கதைக்கு வரலாம்.00:12:44
00:12:44
முக்கியமான ரெண்டு கைதிகள கவனிச்சிக்குற பொறுப்பு
அவருக்கு கொடுக்கப்படுது.00:12:48
00:12:48
ஒரு கைதி, பார்வோனுக்கு
பானம் பரிமார்றவங்களோட தலைவன்,00:12:51
00:12:51
இன்னொரு கைதி, பார்வோனுக்கு
ரொட்டி சுடுறவங்களோட தலைவன்.00:12:55
00:12:55
ஒருநாள் ராத்திரி, அவங்க ரெண்டு பேருக்கும்,
விநோதமான கனவு வருது.00:12:59
00:12:59
அந்த கனவுகளுக்கு சரியான அர்த்தம் சொல்ல
யெகோவா யோசேப்புக்கு உதவுறாரு.00:13:03
00:13:03
யோசேப்பு சொல்றபடியே நடக்குது.00:13:06
00:13:06
ஆதியாகமம் 40:14-ல நாம பார்க்குற மாதிரி,00:13:09
00:13:09
யோசேப்பு பானம் பரிமார்றவங்களோட
தலைவன்கிட்ட,00:13:12
00:13:12
‘உங்களுக்கு நல்லது நடக்குறப்போ
என்னை நினைச்சுக்கோங்க.00:13:15
00:13:15
தயவுசெஞ்சு எனக்கு விசுவாசமா இருங்க.00:13:17
00:13:17
என்னை பத்தி பார்வோன்கிட்ட சொல்லி
இந்த சிறையிலிருந்து வெளியே வர00:13:20
00:13:20
உதவி செய்யுங்க’ அப்படின்னு சொல்றாரு.00:13:23
00:13:23
ஆனா, அந்த தலைவன்
சிறையில இருந்து போனதுக்கு அப்புறம்00:13:26
00:13:26
யோசேப்ப பத்தி சுத்தமா மறந்துடறாரு.00:13:29
00:13:29
அப்புறம், பார்வோனுக்குக்கூட
விநோதமான ரெண்டு கனவுகள் வருது.00:13:34
00:13:34
ஒரு கனவுல நோஞ்சான் பசுக்கள்
புஷ்டியான பசுக்கள விழுங்கிடுது.00:13:38
00:13:38
இன்னொரு கனவுல, பதரா இருக்குற கதிர்கள்00:13:41
00:13:41
செழிப்பா இருக்கற கதிர்கள விழுங்கிடுது.00:13:44
00:13:44
எகிப்துல இருக்குற மந்திரவாதிகள், ஞானிகள்னு
யாருக்குமே அதோட அர்த்தம் தெரியல.00:13:50
00:13:50
கடைசில, கனவுகளுக்கு அர்த்தம் சொல்ற
அற்புதமான திறமை00:13:53
00:13:53
யோசேப்புக்கு இருக்கறத பத்தி00:13:55
00:13:55
பானம் பரிமார்றவங்களோட தலைவன்
பார்வோன்கிட்ட சொல்றாரு.00:13:59
00:13:59
உடனே பார்வோன் யோசேப்ப
கூட்டிட்டு வர சொல்றாரு.00:14:02
00:14:02
இப்ப ஆதியாகமம் 41:25-லிருந்து படிக்கலாம்.00:14:07
00:14:07
30 வயசுல இருக்குற யோசேப்பு,
ராஜாக்கு முன்னாடி நிக்குறாரு.00:14:12
00:15:28
பஞ்சத்திலிருந்து தப்பிக்கறதுக்கு
யோசேப்பு ஒரு அருமையான வழிய சொல்றாரு.00:15:33
00:15:33
யோசேப்பு கனவுகளுக்கு அர்த்தம் சொன்னதுனாலயும்00:15:37
00:15:37
நல்ல ஆலோசனை கொடுத்ததுனாலயும்00:15:39
00:15:39
பார்வோனுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுது.00:15:41
00:15:41
அதனால, அவருக்கடுத்த பதவியையே
யோசேப்புக்கு கொடுத்து,00:15:45
00:15:45
எகிப்து தேசத்துக்கு அதிகாரியா நியமிக்கிறாரு.00:15:48
00:15:48
எட்டு வருஷத்துக்கு அப்புறம்,
பயங்கர பஞ்சம் வருது.00:15:51
00:15:51
யோசேப்போட குடும்பமும்
கஷ்டப்படறாங்க.00:15:54
00:15:54
அதனால யாக்கோபு, எகிப்துக்கு போய்
உணவு வாங்கிட்டுவர சொல்லி00:15:58
00:15:58
அவரோட மகன்கள அனுப்புறாரு.00:16:00
00:16:00
யாக்கோபோட பத்து மகன்களும்
எகிப்துக்கு கிளம்பி போறாங்க.00:16:04
00:16:04
தன்னோட கடைசி மகன் பென்யமீன மட்டும்
யாக்கோபு அனுப்பி வைக்கல.00:16:08
00:16:09
அந்த பத்து பேரும் யோசேப்ப பார்த்து,00:16:12
00:16:12
அவர் முன்னால தலைவணங்குறாங்க.00:16:14
00:16:14
பல வருஷத்துக்கு முன்னால
யோசேப்பு பார்த்த கனவு00:16:16
00:16:16
அப்போ நிறைவேறுது.00:16:18
00:16:18
யோசேப்பு அவரோட அண்ணன்கள
அடையாளம் கண்டுபிடிச்சிடுறாரு.00:16:22
00:16:22
ஆனா, அவங்களுக்கு அவர் யாருன்னே தெரியல.00:16:25
00:16:25
அவரும் தான் யாருன்னு சொல்லாம,00:16:27
00:16:27
ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமா
அவங்ககிட்ட எகிப்து பாஷையிலேயே பேசுறாரு.00:16:31
00:16:32
இப்ப யோசேப்பு ஒரு முடிவு எடுக்கணும்.00:16:35
00:16:35
தனக்கு இருக்குற அதிகாரத்த வெச்சு தன்னோட
அண்ணன்கள பழிவாங்கறதா?00:16:40
00:16:40
இல்ல, தான் உதவி செய்ற அளவுக்கு00:16:42
00:16:42
அவங்க ஒண்ணும் நல்லவங்க இல்லன்னு
நினைச்சு திருப்பி அனுப்பிடுறதா?00:16:46
00:16:46
இல்லன்னா, அவங்களோட சமாதானம்
ஆகறதுக்கு முயற்சி பண்றதா?00:16:50
00:16:50
யெகோவா மாதிரியே யோசேப்பு
மாறாத அன்பு காட்டுவாரா?00:16:54
00:16:54
நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?00:16:57
00:16:58
யோசேப்பு தன்னோட அண்ணன்கள் திருந்திட்டாங்களா,00:17:02
00:17:02
இல்ல முன்ன மாதிரியே00:17:03
00:17:03
பொறாமையோடவும் வெறுப்போடவும்
நடந்துப்பாங்களான்னு தெரிஞ்சுக்க நினைக்குறாரு.00:17:07
00:17:07
அதனால, அவங்க உளவு பார்க்க
வந்திருக்குறதா குற்றம்சுமத்தி,00:17:10
00:17:10
பென்யமீன கூட்டிட்டு வர்ற வரைக்கும்00:17:12
00:17:12
சிமியோன அங்கேயே கைதியா
பிடிச்சு வைக்கப்போறதா சொல்றாரு.00:17:17
00:17:17
இப்ப ஆதியாகமம் 42:21-24-ஐ படிக்கலாம்.00:17:23
00:18:08
யோசேப்ப மோசமா நடத்துனத நெனைச்சு,00:18:11
00:18:11
ரூபன் வருத்தப்பட்டு பேசுறாரு.00:18:13
00:18:13
ஆனா, ரூபனும் அவரோட சகோதரர்களும்
உண்மையிலேயே திருந்திட்டாங்களா?00:18:18
00:18:18
அத கண்டுபிடிக்கறதுக்காகத்தான்
யோசேப்பு அவங்ககிட்ட,00:18:21
00:18:21
கானானுக்கு திரும்பிப் போய் அவங்களோட
கடைசி தம்பி பென்யமீன00:18:24
00:18:24
எகிப்துக்கு கூட்டிட்டு வரச்சொல்லி சொல்றாரு.00:18:28
00:18:28
அவங்க யாக்கோபுகிட்ட போய்,00:18:29
00:18:29
பென்யமீன எகிப்துக்கு கூட்டிட்டு போக
அனுமதி கேக்குறாங்க.00:18:33
00:18:33
அப்போ, யாக்கோபு என்ன சொல்றாருனு00:18:35
00:18:35
ஆதியாகமம் 42:36, 37-லுல கவனியுங்க.00:18:40
00:19:06
யாக்கோபு பிடிவாதமா இருக்காரு.00:19:08
00:19:08
பென்யமீன அவரு எகிப்துக்கு
அனுப்பி வைக்கறதாவே இல்ல.00:19:12
00:19:12
ஆனா,00:19:13
00:19:13
பஞ்சம் ஆரம்பிச்சு ரெண்டாவது வருஷத்துல,00:19:16
00:19:16
யாக்கோபோட வீட்டுல இருந்த உணவுப் பொருள்கள்
எல்லாமே தீர்ந்து போயிடுது.00:19:20
00:19:20
இப்ப யாக்கோபோட மகன்கள்00:19:22
00:19:22
எகிப்துல இருந்து உணவு வாங்கிட்டு வரணும்னா00:19:25
00:19:25
பென்யமீனையும் கூட்டிட்டு போயாகணும்.00:19:27
00:19:27
இதுக்கு யாக்கோபு சம்மதிப்பாரா?00:19:29
00:19:29
ஆதியாகமம் 43:8-10-ஐயும் 13, 14-ஐயும்
வாசிச்சு பார்க்கலாம்.00:19:36
00:20:26
யாக்கோபோட செல்லப் பிள்ளையா இருந்த யோசேப்ப00:20:29
00:20:29
ஒருகாலத்துல அடியோட வெறுத்த
அதே யூதா00:20:32
00:20:32
இப்ப என்ன செய்றாருனு கவனிச்சீங்களா?00:20:34
00:20:34
யாக்கோபோட செல்லப் பிள்ளையா இருக்குற
பென்யமீனோட உயிருக்கு00:20:37
00:20:37
அவரு முழு உத்தரவாதம் தர்றாரு.00:20:40
00:20:40
அதனால யாக்கோபு, தன்னோட மகன்கள
எகிப்துக்கு போக அனுமதிக்குறாரு.00:20:44
00:20:44
யோசேப்புக்கு அன்பளிப்புகளயும் கொடுத்து அனுப்புறாரு.00:20:47
00:20:47
அப்புறம் என்ன நடக்குதுன்னு
ஆதியாகமம் 43:26-30-ல பார்க்கலாம்.00:20:53
00:21:48
தன்னோட அண்ணன்கள்00:21:49
00:21:49
உண்மையிலேயே
திருந்திட்டாங்களான்னு தெரிஞ்சுக்குறதுக்காக00:21:52
00:21:52
யோசேப்பு அவங்கள சோதிச்சு பார்க்கறாரு.00:21:54
00:21:54
எப்படி?00:21:55
00:21:55
அவங்க எல்லார் பையிலயும்
தானியங்கள நிரப்ப சொல்லி00:21:58
00:21:58
தன்னோட ஆளுங்ககிட்ட சொல்றாரு.00:22:00
00:22:00
அப்புறம்,00:22:01
00:22:01
யாருக்கும் தெரியாம பென்யமீனோட பையில00:22:04
00:22:04
தன்னோட வெள்ளிக் கோப்பைய
போட்டுட சொல்றாரு.00:22:06
00:22:06
அவங்க எல்லாரும் புறப்பட்டு போறாங்க.00:22:08
00:22:08
ஆனா அவங்க கொஞ்ச தூரம்
போனதுக்கு அப்புறம்,00:22:11
00:22:11
யோசேப்பு தன்னோட ஆளுங்கள
அவங்களுக்கு பின்னாலயே அனுப்புனாரு.00:22:14
00:22:14
அந்த ஆளுங்க அவங்கள துரத்திப் பிடிச்சு,00:22:17
00:22:17
‘எங்க எஜமானோட கோப்பையை நீங்க
ஏன் திருடிட்டு வந்தீங்க?’00:22:20
00:22:20
அப்படின்னு கேட்கறாங்க.00:22:22
00:22:23
ஆனா, அத திருடவே இல்லன்னு
யோசேப்போட அண்ணன்கள் சொல்றாங்க.00:22:28
00:22:28
‘எங்க யார்கிட்டயாவது அந்த கோப்ப இருந்தா00:22:30
00:22:30
அவனை கொன்னுடுங்க’னுகூட
சொல்றாங்க.00:22:33
00:22:33
அதனால, யோசேப்போட ஆளுங்க
அவங்க எல்லாரோட பையிலயும் தேடுறாங்க.00:22:37
00:22:37
கடைசில, பென்யமீனோட பையில
கோப்பைய கண்டுபிடிக்கிறாங்க.00:22:40
00:22:40
உடனே, யோசேப்போட சகோதரர்கள் துக்கத்துல
தங்களோட உடைய கிழிச்சுக்குறாங்க.00:22:45
00:22:45
அப்புறம், பயங்கர குழப்பத்துல,00:22:47
00:22:47
பென்யமீன் கூடவே
யோசேப்போட வீட்டுக்கு போறாங்க.00:22:51
00:22:51
யூதா யோசேப்புக்கு முன்னால
சாஷ்டாங்கமா விழுந்து,00:22:55
00:22:55
‘உங்க அடிமைகளான நாங்க,00:22:57
00:22:57
முன்னாடி தப்பு செஞ்சதுனால
இப்போ உண்மைக் கடவுள் எங்கள தண்டிக்கிறாரு.00:23:01
00:23:01
இனி நாங்க உங்களுக்கு அடிமைகள்!’னு சொன்னாரு.00:23:04
00:23:05
ஆனா யோசேப்பு தொடர்ந்து அவங்கள சோதிக்கிறதுக்காக,00:23:08
00:23:08
‘நீங்க எல்லாரும் உங்க வீட்டுக்கு போகலாம்.00:23:11
00:23:11
ஆனா பென்யமீன் மட்டும் இங்கேயே
எனக்கு அடிமையா இருக்கணும்’னு00:23:14
00:23:14
உறுதியா சொல்லிடறாரு.00:23:16
00:23:16
ஆனா யூதா, ‘இவன திரும்பவும் கூட்டிட்டு போலன்னா,00:23:20
00:23:20
என் அப்பா கண்டிப்பா செத்துப்போயிடுவாரு.00:23:23
00:23:23
அப்புறம், சாகுறவரைக்கும் அந்தப் பழி
என் தலைமேல இருக்கும்’னு கெஞ்சுறாரு.00:23:28
00:23:28
இன்னொரு செல்லப் பிள்ளையை பறிகொடுக்குற வேதனை00:23:31
00:23:31
அப்பாவுக்கு வரக் கூடாதுன்னு
யூதா நினைக்கிறாரு.00:23:33
00:23:33
அதனால, பென்யமீனுக்கு பதிலா00:23:36
00:23:36
தன்னை அடிமையா வெச்சுக்க சொல்லி சொல்றாரு.00:23:39
00:23:39
அப்ப யோசேப்புக்கு எப்படி இருந்துதுன்னு
ஆதியாகமம் 45:1-15ல பார்க்கலாம்.00:23:47
00:26:36
யாக்கோபும் அவரோட குடும்பத்துல இருக்குற
கிட்டத்தட்ட 70 பேரும்00:26:39
00:26:39
எகிப்துக்கு குடிமாறி வர்றாங்க.00:26:42
00:26:42
பார்வோன் அவங்களுக்கு
கோசேன் தேசத்த கொடுக்கறாரு.00:26:46
00:26:46
215 வருஷத்துக்கு யாக்கோபோட சந்ததி
எகிப்துல வாழ்றாங்க.00:26:50
00:26:50
கடைசில, கிட்டத்தட்ட மூணு லட்சத்துக்கும்
அதிகமான இஸ்ரவேலர்கள்,00:26:54
00:26:54
செங்கடல கடந்து போறாங்க.00:26:57
00:26:57
அப்புறம் ஒருவழியா, வாக்குக் கொடுக்கப்பட்ட
தேசத்துல குடியேறுறாங்க.00:27:01
00:27:01
இப்படி, மேசியாவோட வம்சாவளிய பாதுகாக்க00:27:04
00:27:04
யெகோவா யோசேப்பை பயன்படுத்துனாரு.00:27:07
00:27:07
யோசேப்போட கதையிலிருந்து
நாம என்ன கத்துக்குறோம்?00:27:11
00:27:11
யோசேப்பு எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும்,00:27:13
00:27:13
யெகோவாமேல வெச்சிருந்த
அன்ப விடவே இல்ல.00:27:17
00:27:17
வருஷக்கணக்கா அவருக்கு
சோதனைக்குமேல சோதனை வந்துது.00:27:20
00:27:20
ஆனா, அவரு மனக்கசப்ப வளர்த்துக்கல.00:27:23
00:27:23
இன்னைக்கு நமக்குக்கூட கஷ்டங்கள் வருது.00:27:26
00:27:26
கஷ்டம் வர்றதும் வராம இருக்குறதும்
நம்ம கையில இல்ல,00:27:29
00:27:29
ஆனா அது வர்றப்போ00:27:31
00:27:31
எப்படி நடந்துக்குறோங்கறது
நம்ம கையிலதான் இருக்கு.00:27:33
00:27:33
எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும்00:27:35
00:27:35
நாம யெகோவாமேல கோவப்படுறது இல்ல.00:27:37
00:27:37
நாம அவர்மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கோம்.00:27:40
00:27:40
அத நிரூபிக்க தீர்மானமாவும் இருக்கோம்.00:27:42
00:27:42
அதனால, அவரோட மனச கஷ்டப்படுத்துற மாதிரி00:27:45
00:27:45
நாம எதுவும் செய்ய மாட்டோம்.00:27:47
00:27:48
யோசேப்பு ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்போ00:27:50
00:27:50
அவரோட அண்ணன்கள் செஞ்ச
கொடுமைகள பத்தியெல்லாம் யோசிக்காம,00:27:53
00:27:53
அவங்கமேல மாறாத அன்ப காட்டுனாரு.00:27:56
00:27:57
சொல்லப்போனா,00:27:58
00:27:58
யோசேப்பு அவரோட குடும்பத்துமேல
மாறாத அன்ப காட்டுனது00:28:01
00:28:01
ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறுறதுக்கு
உதவியா இருந்துச்சு!00:28:04
00:28:04
யோசேப்போட கொள்ளுத்தாத்தா ஆபிரகாம் காலத்துல,00:28:07
00:28:07
யெகோவா தன்னோட மக்கள00:28:09
00:28:09
எப்ப விடுதல செய்யனும்னு முடிவு பண்ணியிருந்தாரு.00:28:11
00:28:11
சரியா 430 வருஷத்துக்கு அப்புறம்
அப்படி செய்யணும்னு நெனைச்சிருந்தாரு.00:28:16
00:28:16
யோசேப்பு தன்னோட குடும்பத்துமேல
மாறாத அன்பு காட்டலன்னா,00:28:19
00:28:19
அந்த தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கும்?00:28:22
00:28:22
இன்னைக்கு நாமகூட, சகோதர சகோதரிகள்மேல00:28:24
00:28:24
மாறாத அன்ப காட்டணும்னு யெகோவா எதிர்பார்க்குறார்.00:28:27
00:28:27
அவங்கள்ல யாராவது உங்க மனச கஷ்டப்படுத்திட்டா,00:28:30
00:28:30
பதிலுக்கு பதில் செய்யணும்னு உங்களுக்கு தோணலாம்,00:28:32
00:28:32
இல்லன்னா அவங்கள பத்தி மத்தவங்ககிட்ட
குறை சொல்லணும்னு தோணலாம்.00:28:36
00:28:36
ஆனா, அப்படியெல்லாம் செய்யாதீங்க.00:28:39
00:28:39
அவங்களோட சமாதானம் ஆகுறதுக்கு
எல்லா முயற்சியும் எடுங்க.00:28:42
00:28:42
நம்ம சகோதர சகோதரிகள்மேல
யெகோவா அன்பு காட்டுறாரு.00:28:46
00:28:46
அப்படின்னா, நாமளும் அவங்கமேல
மாறாத அன்ப காட்டணும், இல்லையா?00:28:50
00:28:50
இந்த பதிவுல,00:28:51
00:28:51
மாறாத அன்ப காட்டுனதுல
சிறந்த உதாரணம் யெகோவாதான்.00:28:54
00:28:54
யோசேப்ப அவரோட குடும்பத்துல
இருந்தவங்களே கைவிட்டுட்டாங்க,00:28:57
00:28:57
அவரோட முதலாளியோட மனைவி
அவர்மேல பொய்க் குற்றம் சுமத்துனாங்க,00:29:01
00:29:01
கடைசில அவர சிறையில தள்ளிட்டாங்க.00:29:03
00:29:03
ஆனாலும், ‘யெகோவா யோசேப்புகூடவே இருந்தாரு.00:29:06
00:29:06
அவர கைவிடாம மாறாத அன்ப
எப்பவும் காட்டுனாரு.’00:29:09
00:29:09
ஏன்?00:29:10
00:29:11
யோசேப்பு தனக்கு உண்மையா
இருக்கறத பார்த்தாரு,00:29:13
00:29:13
அதனால அவரும் யோசேப்புக்கு
உண்மையா இருந்தாரு.00:29:17
00:29:17
யெகோவா யோசேப்ப நடத்துன விதம்,00:29:20
00:29:20
இஸ்ரவேல் தேசத்துமேலயும் அவருக்கு
மாறாத அன்பு இருந்தத காட்டுது.00:29:24
00:29:24
யெகோவா யோசேப்ப பயன்படுத்தி
அவரோட குடும்பத்த காப்பாத்துறதன் மூலமா,00:29:28
00:29:28
மேசியாவோட வம்சாவளிய பாதுகாத்தாரு.00:29:31
00:29:31
அதோட, இஸ்ரவேலர்கள
விடுதலை பண்ணப்போறதா கொடுத்த வாக்க00:29:34
00:29:34
சரியான சமயத்துல நிறைவேத்துனாரு.00:29:37
00:29:37
இத கேட்கவே ஆறுதலா இருக்குல?00:29:40
00:29:40
மனுஷங்க வேணா உங்கள கைவிடலாம்,00:29:42
00:29:42
கேலி செய்யலாம்,00:29:43
00:29:43
உங்கள பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லலாம்,00:29:45
00:29:45
உங்கள அநியாயமாக்கூட நடத்தலாம்.00:29:47
00:29:47
ஆனா, நீங்க யெகோவாவுக்கு உண்மையா இருந்தா00:29:50
00:29:50
அவரு உங்கள கைவிடவே மாட்டாரு.00:29:52
00:29:52
அன்னைக்கு யோசேப்ப அவரு மறக்கவே இல்ல.00:29:54
00:29:54
இன்னைக்கும் அவரோட உண்மை ஊழியர்கள
அவரு மறக்கவே மாட்டாரு.00:29:58
00:29:58
அதனால, எப்பவும் யெகோவாவ கெட்டியா பிடிச்சுக்கோங்க,00:30:01
00:30:01
அப்ப அவரு தொடர்ந்து உங்கமேல00:30:03
00:30:03
மாறாத அன்ப காட்டுவாரு.00:30:05
யெகோவா மாறாத அன்பை எப்போதும் காட்டிவந்தார்
-
யெகோவா மாறாத அன்பை எப்போதும் காட்டிவந்தார்
இந்த உலகத்துல நம்ம எல்லாருக்குமே
கஷ்டங்கள் வருது.
நீங்க எப்பவாவது,
‘யெகோவா எனக்கு உதவி செய்வாரா,
எப்ப உதவி செய்வார்’
அப்படினெல்லாம் யோசிச்சிருக்கீங்களா?
கஷ்டங்கள தாங்கிக்க
யெகோவா நமக்கு உதவி செய்வாருங்கறதுல
சந்தேகமே இல்ல.
ஏன்?
ஏன்னா, யெகோவாவோட குணங்கள்லயே
ரொம்ப ரொம்ப முக்கியமான,
அருமையான குணம், அன்புதான்.
அன்ப பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கவும்,
நாம எப்படி இந்த குணத்த
காட்டலாம்னு புரிஞ்சுக்கவும்,
இப்ப யோசேப்போட கதைய பார்க்கலாம்.
யோசேப்பு 3,700 வருஷங்களுக்கு முன்னாடி
மெசொப்பொத்தாமியாவுல பிறந்தாரு.
அவரோட அப்பா பேரு யாக்கோபு.
யாக்கோபுக்கு இஸ்ரவேல்-ங்கற பேரும் இருந்துச்சு.
யோசேப்புக்கு பத்து அண்ணன்களும்,
ஒரேவொரு தம்பி பென்யமீனும் இருந்தாங்க.
சின்ன வயசுலேயே யோசேப்புக்கு
நிறைய கஷ்டம் வந்துச்சு.
ஏன்னா, அவரோட பத்து அண்ணன்களும்
பொறாமையினால
அவர கொடுமைப்படுத்துனாங்க.
ஆனாலும், யோசேப்பு அதையெல்லாம்
தாங்கிக்கிட்டதுனால
பிற்காலத்துல அவரோட முழு குடும்பத்தையும்
பஞ்சத்துல இருந்து காப்பாத்த முடிஞ்சுது.
அதுமட்டுமில்ல, நம்ம எல்லாருக்கும்கூட
அளவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகுது.
இப்ப நாம எல்லாரும் நம்ம பைபிள திறந்து
ஆதியாகமம் 37:2-11 வரைக்கும்
படிக்கலாம்.
யோசேப்போட குடும்பத்துல இருக்குறவங்களால
அந்த கனவுகளோட அர்த்தத்த ஏத்துக்க முடியல.
ஆனாலும் யாக்கோபு,
யோசேப்பு சொன்ன விஷயங்கள,
அதாவது அவரோட கனவுகள,
‘தன்னோட மனசுல வெச்சுக்குறாரு.’
அப்படின்னா, அத பத்தி திரும்பத் திரும்ப
யோசிச்சிட்டே இருக்காரு.
யெகோவாதான் யோசேப்புக்கு அந்த கனவுகள
வரவெச்சிருப்பாருன்னு அவருக்கு புரிஞ்சிருக்கலாம்.
ஆனா, யோசேப்போட அண்ணன்கள் என்ன செய்றாங்க?
ஆதியாகமம் 37:18-36 வரைக்கும்
இப்ப பார்க்கலாம்.
நிலைமை எப்படி தலைகீழா
மாறிடுச்சுனு பார்த்தீங்களா!
செல்ல மகனா இருந்தவர்
இப்ப அடிமையா ஆயிட்டார்!
யோசேப்போட அண்ணன்கள்
அவர்மேல மட்டும் அன்பு காட்டாம போயிடல,
அவங்க அப்பா யாக்கோபு மேலயும்
அன்பு காட்டாம போயிட்டாங்க,
முக்கியமா அவங்களோட பரலோக தகப்பன்
யெகோவாமேலயும்தான்.
யெகோவாவோட உண்மை ஊழியர்கள்கூட
அநியாயங்கள சந்திக்க வேண்டியிருக்கலாம்.
சிலசமயம், நம்மளோட சகோதர சகோதரிகளே
நமக்கு ஏதாவது அநியாயம் செஞ்சிடலாம்.
நீங்க அந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலதான் இருக்கீங்களா?
உண்மைல, இந்த சோதனைகள்லாம்,
நீங்க யெகோவாமேல வெச்சிருக்குற அன்ப நிரூபிக்கறதுக்கு
அருமையான வாய்ப்பா இருக்கு.
எப்படி சொல்லலாம்?
இது மாதிரியான சூழ்நிலைல யோசேப்பு
எப்படி நடந்துகிட்டாருன்னு
ஆதியாகமம் 39:1-23-ல பாருங்க.
சிறையிலகூட யோசேப்ப யெகோவா
அக்கறையா பார்த்துக்கிட்டாரு.
யோசேப்பு செஞ்ச எல்லாத்திலயும்
அவருக்கு வெற்றி தந்தாரு.
யெகோவாவுக்கு ஏன் யோசேப்புமேல இவ்ளோ பாசம்?
ஏன்னா யோசேப்பு, எந்த சூழ்நிலையிலயும்
யெகோவாமேல வெச்சிருந்த அன்ப விடவே இல்ல.
யோசேப்போட அனுபவத்துல இருந்து
நாம என்ன பாடம் கத்துக்குறோம்?
நாம எப்பவும் யெகோவாமேல
அன்பு காட்டுனா
அவர் நம்மள கைவிடவே மாட்டாரு.
அதுக்கு பதிலா,
சோதனைய சகிக்குறதுக்கு
நமக்கு என்ன தேவையோ
அத சரியான நேரத்துல கொடுத்து, உதவி செய்வாரு.
இப்ப மறுபடியும் யோசேப்போட கதைக்கு வரலாம்.
முக்கியமான ரெண்டு கைதிகள கவனிச்சிக்குற பொறுப்பு
அவருக்கு கொடுக்கப்படுது.
ஒரு கைதி, பார்வோனுக்கு
பானம் பரிமார்றவங்களோட தலைவன்,
இன்னொரு கைதி, பார்வோனுக்கு
ரொட்டி சுடுறவங்களோட தலைவன்.
ஒருநாள் ராத்திரி, அவங்க ரெண்டு பேருக்கும்,
விநோதமான கனவு வருது.
அந்த கனவுகளுக்கு சரியான அர்த்தம் சொல்ல
யெகோவா யோசேப்புக்கு உதவுறாரு.
யோசேப்பு சொல்றபடியே நடக்குது.
ஆதியாகமம் 40:14-ல நாம பார்க்குற மாதிரி,
யோசேப்பு பானம் பரிமார்றவங்களோட
தலைவன்கிட்ட,
‘உங்களுக்கு நல்லது நடக்குறப்போ
என்னை நினைச்சுக்கோங்க.
தயவுசெஞ்சு எனக்கு விசுவாசமா இருங்க.
என்னை பத்தி பார்வோன்கிட்ட சொல்லி
இந்த சிறையிலிருந்து வெளியே வர
உதவி செய்யுங்க’ அப்படின்னு சொல்றாரு.
ஆனா, அந்த தலைவன்
சிறையில இருந்து போனதுக்கு அப்புறம்
யோசேப்ப பத்தி சுத்தமா மறந்துடறாரு.
அப்புறம், பார்வோனுக்குக்கூட
விநோதமான ரெண்டு கனவுகள் வருது.
ஒரு கனவுல நோஞ்சான் பசுக்கள்
புஷ்டியான பசுக்கள விழுங்கிடுது.
இன்னொரு கனவுல, பதரா இருக்குற கதிர்கள்
செழிப்பா இருக்கற கதிர்கள விழுங்கிடுது.
எகிப்துல இருக்குற மந்திரவாதிகள், ஞானிகள்னு
யாருக்குமே அதோட அர்த்தம் தெரியல.
கடைசில, கனவுகளுக்கு அர்த்தம் சொல்ற
அற்புதமான திறமை
யோசேப்புக்கு இருக்கறத பத்தி
பானம் பரிமார்றவங்களோட தலைவன்
பார்வோன்கிட்ட சொல்றாரு.
உடனே பார்வோன் யோசேப்ப
கூட்டிட்டு வர சொல்றாரு.
இப்ப ஆதியாகமம் 41:25-லிருந்து படிக்கலாம்.
30 வயசுல இருக்குற யோசேப்பு,
ராஜாக்கு முன்னாடி நிக்குறாரு.
பஞ்சத்திலிருந்து தப்பிக்கறதுக்கு
யோசேப்பு ஒரு அருமையான வழிய சொல்றாரு.
யோசேப்பு கனவுகளுக்கு அர்த்தம் சொன்னதுனாலயும்
நல்ல ஆலோசனை கொடுத்ததுனாலயும்
பார்வோனுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுது.
அதனால, அவருக்கடுத்த பதவியையே
யோசேப்புக்கு கொடுத்து,
எகிப்து தேசத்துக்கு அதிகாரியா நியமிக்கிறாரு.
எட்டு வருஷத்துக்கு அப்புறம்,
பயங்கர பஞ்சம் வருது.
யோசேப்போட குடும்பமும்
கஷ்டப்படறாங்க.
அதனால யாக்கோபு, எகிப்துக்கு போய்
உணவு வாங்கிட்டுவர சொல்லி
அவரோட மகன்கள அனுப்புறாரு.
யாக்கோபோட பத்து மகன்களும்
எகிப்துக்கு கிளம்பி போறாங்க.
தன்னோட கடைசி மகன் பென்யமீன மட்டும்
யாக்கோபு அனுப்பி வைக்கல.
அந்த பத்து பேரும் யோசேப்ப பார்த்து,
அவர் முன்னால தலைவணங்குறாங்க.
பல வருஷத்துக்கு முன்னால
யோசேப்பு பார்த்த கனவு
அப்போ நிறைவேறுது.
யோசேப்பு அவரோட அண்ணன்கள
அடையாளம் கண்டுபிடிச்சிடுறாரு.
ஆனா, அவங்களுக்கு அவர் யாருன்னே தெரியல.
அவரும் தான் யாருன்னு சொல்லாம,
ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமா
அவங்ககிட்ட எகிப்து பாஷையிலேயே பேசுறாரு.
இப்ப யோசேப்பு ஒரு முடிவு எடுக்கணும்.
தனக்கு இருக்குற அதிகாரத்த வெச்சு தன்னோட
அண்ணன்கள பழிவாங்கறதா?
இல்ல, தான் உதவி செய்ற அளவுக்கு
அவங்க ஒண்ணும் நல்லவங்க இல்லன்னு
நினைச்சு திருப்பி அனுப்பிடுறதா?
இல்லன்னா, அவங்களோட சமாதானம்
ஆகறதுக்கு முயற்சி பண்றதா?
யெகோவா மாதிரியே யோசேப்பு
மாறாத அன்பு காட்டுவாரா?
நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?
யோசேப்பு தன்னோட அண்ணன்கள் திருந்திட்டாங்களா,
இல்ல முன்ன மாதிரியே
பொறாமையோடவும் வெறுப்போடவும்
நடந்துப்பாங்களான்னு தெரிஞ்சுக்க நினைக்குறாரு.
அதனால, அவங்க உளவு பார்க்க
வந்திருக்குறதா குற்றம்சுமத்தி,
பென்யமீன கூட்டிட்டு வர்ற வரைக்கும்
சிமியோன அங்கேயே கைதியா
பிடிச்சு வைக்கப்போறதா சொல்றாரு.
இப்ப ஆதியாகமம் 42:21-24-ஐ படிக்கலாம்.
யோசேப்ப மோசமா நடத்துனத நெனைச்சு,
ரூபன் வருத்தப்பட்டு பேசுறாரு.
ஆனா, ரூபனும் அவரோட சகோதரர்களும்
உண்மையிலேயே திருந்திட்டாங்களா?
அத கண்டுபிடிக்கறதுக்காகத்தான்
யோசேப்பு அவங்ககிட்ட,
கானானுக்கு திரும்பிப் போய் அவங்களோட
கடைசி தம்பி பென்யமீன
எகிப்துக்கு கூட்டிட்டு வரச்சொல்லி சொல்றாரு.
அவங்க யாக்கோபுகிட்ட போய்,
பென்யமீன எகிப்துக்கு கூட்டிட்டு போக
அனுமதி கேக்குறாங்க.
அப்போ, யாக்கோபு என்ன சொல்றாருனு
ஆதியாகமம் 42:36, 37-லுல கவனியுங்க.
யாக்கோபு பிடிவாதமா இருக்காரு.
பென்யமீன அவரு எகிப்துக்கு
அனுப்பி வைக்கறதாவே இல்ல.
ஆனா,
பஞ்சம் ஆரம்பிச்சு ரெண்டாவது வருஷத்துல,
யாக்கோபோட வீட்டுல இருந்த உணவுப் பொருள்கள்
எல்லாமே தீர்ந்து போயிடுது.
இப்ப யாக்கோபோட மகன்கள்
எகிப்துல இருந்து உணவு வாங்கிட்டு வரணும்னா
பென்யமீனையும் கூட்டிட்டு போயாகணும்.
இதுக்கு யாக்கோபு சம்மதிப்பாரா?
ஆதியாகமம் 43:8-10-ஐயும் 13, 14-ஐயும்
வாசிச்சு பார்க்கலாம்.
யாக்கோபோட செல்லப் பிள்ளையா இருந்த யோசேப்ப
ஒருகாலத்துல அடியோட வெறுத்த
அதே யூதா
இப்ப என்ன செய்றாருனு கவனிச்சீங்களா?
யாக்கோபோட செல்லப் பிள்ளையா இருக்குற
பென்யமீனோட உயிருக்கு
அவரு முழு உத்தரவாதம் தர்றாரு.
அதனால யாக்கோபு, தன்னோட மகன்கள
எகிப்துக்கு போக அனுமதிக்குறாரு.
யோசேப்புக்கு அன்பளிப்புகளயும் கொடுத்து அனுப்புறாரு.
அப்புறம் என்ன நடக்குதுன்னு
ஆதியாகமம் 43:26-30-ல பார்க்கலாம்.
தன்னோட அண்ணன்கள்
உண்மையிலேயே
திருந்திட்டாங்களான்னு தெரிஞ்சுக்குறதுக்காக
யோசேப்பு அவங்கள சோதிச்சு பார்க்கறாரு.
எப்படி?
அவங்க எல்லார் பையிலயும்
தானியங்கள நிரப்ப சொல்லி
தன்னோட ஆளுங்ககிட்ட சொல்றாரு.
அப்புறம்,
யாருக்கும் தெரியாம பென்யமீனோட பையில
தன்னோட வெள்ளிக் கோப்பைய
போட்டுட சொல்றாரு.
அவங்க எல்லாரும் புறப்பட்டு போறாங்க.
ஆனா அவங்க கொஞ்ச தூரம்
போனதுக்கு அப்புறம்,
யோசேப்பு தன்னோட ஆளுங்கள
அவங்களுக்கு பின்னாலயே அனுப்புனாரு.
அந்த ஆளுங்க அவங்கள துரத்திப் பிடிச்சு,
‘எங்க எஜமானோட கோப்பையை நீங்க
ஏன் திருடிட்டு வந்தீங்க?’
அப்படின்னு கேட்கறாங்க.
ஆனா, அத திருடவே இல்லன்னு
யோசேப்போட அண்ணன்கள் சொல்றாங்க.
‘எங்க யார்கிட்டயாவது அந்த கோப்ப இருந்தா
அவனை கொன்னுடுங்க’னுகூட
சொல்றாங்க.
அதனால, யோசேப்போட ஆளுங்க
அவங்க எல்லாரோட பையிலயும் தேடுறாங்க.
கடைசில, பென்யமீனோட பையில
கோப்பைய கண்டுபிடிக்கிறாங்க.
உடனே, யோசேப்போட சகோதரர்கள் துக்கத்துல
தங்களோட உடைய கிழிச்சுக்குறாங்க.
அப்புறம், பயங்கர குழப்பத்துல,
பென்யமீன் கூடவே
யோசேப்போட வீட்டுக்கு போறாங்க.
யூதா யோசேப்புக்கு முன்னால
சாஷ்டாங்கமா விழுந்து,
‘உங்க அடிமைகளான நாங்க,
முன்னாடி தப்பு செஞ்சதுனால
இப்போ உண்மைக் கடவுள் எங்கள தண்டிக்கிறாரு.
இனி நாங்க உங்களுக்கு அடிமைகள்!’னு சொன்னாரு.
ஆனா யோசேப்பு தொடர்ந்து அவங்கள சோதிக்கிறதுக்காக,
‘நீங்க எல்லாரும் உங்க வீட்டுக்கு போகலாம்.
ஆனா பென்யமீன் மட்டும் இங்கேயே
எனக்கு அடிமையா இருக்கணும்’னு
உறுதியா சொல்லிடறாரு.
ஆனா யூதா, ‘இவன திரும்பவும் கூட்டிட்டு போலன்னா,
என் அப்பா கண்டிப்பா செத்துப்போயிடுவாரு.
அப்புறம், சாகுறவரைக்கும் அந்தப் பழி
என் தலைமேல இருக்கும்’னு கெஞ்சுறாரு.
இன்னொரு செல்லப் பிள்ளையை பறிகொடுக்குற வேதனை
அப்பாவுக்கு வரக் கூடாதுன்னு
யூதா நினைக்கிறாரு.
அதனால, பென்யமீனுக்கு பதிலா
தன்னை அடிமையா வெச்சுக்க சொல்லி சொல்றாரு.
அப்ப யோசேப்புக்கு எப்படி இருந்துதுன்னு
ஆதியாகமம் 45:1-15ல பார்க்கலாம்.
யாக்கோபும் அவரோட குடும்பத்துல இருக்குற
கிட்டத்தட்ட 70 பேரும்
எகிப்துக்கு குடிமாறி வர்றாங்க.
பார்வோன் அவங்களுக்கு
கோசேன் தேசத்த கொடுக்கறாரு.
215 வருஷத்துக்கு யாக்கோபோட சந்ததி
எகிப்துல வாழ்றாங்க.
கடைசில, கிட்டத்தட்ட மூணு லட்சத்துக்கும்
அதிகமான இஸ்ரவேலர்கள்,
செங்கடல கடந்து போறாங்க.
அப்புறம் ஒருவழியா, வாக்குக் கொடுக்கப்பட்ட
தேசத்துல குடியேறுறாங்க.
இப்படி, மேசியாவோட வம்சாவளிய பாதுகாக்க
யெகோவா யோசேப்பை பயன்படுத்துனாரு.
யோசேப்போட கதையிலிருந்து
நாம என்ன கத்துக்குறோம்?
யோசேப்பு எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும்,
யெகோவாமேல வெச்சிருந்த
அன்ப விடவே இல்ல.
வருஷக்கணக்கா அவருக்கு
சோதனைக்குமேல சோதனை வந்துது.
ஆனா, அவரு மனக்கசப்ப வளர்த்துக்கல.
இன்னைக்கு நமக்குக்கூட கஷ்டங்கள் வருது.
கஷ்டம் வர்றதும் வராம இருக்குறதும்
நம்ம கையில இல்ல,
ஆனா அது வர்றப்போ
எப்படி நடந்துக்குறோங்கறது
நம்ம கையிலதான் இருக்கு.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும்
நாம யெகோவாமேல கோவப்படுறது இல்ல.
நாம அவர்மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கோம்.
அத நிரூபிக்க தீர்மானமாவும் இருக்கோம்.
அதனால, அவரோட மனச கஷ்டப்படுத்துற மாதிரி
நாம எதுவும் செய்ய மாட்டோம்.
யோசேப்பு ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்போ
அவரோட அண்ணன்கள் செஞ்ச
கொடுமைகள பத்தியெல்லாம் யோசிக்காம,
அவங்கமேல மாறாத அன்ப காட்டுனாரு.
சொல்லப்போனா,
யோசேப்பு அவரோட குடும்பத்துமேல
மாறாத அன்ப காட்டுனது
ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறுறதுக்கு
உதவியா இருந்துச்சு!
யோசேப்போட கொள்ளுத்தாத்தா ஆபிரகாம் காலத்துல,
யெகோவா தன்னோட மக்கள
எப்ப விடுதல செய்யனும்னு முடிவு பண்ணியிருந்தாரு.
சரியா 430 வருஷத்துக்கு அப்புறம்
அப்படி செய்யணும்னு நெனைச்சிருந்தாரு.
யோசேப்பு தன்னோட குடும்பத்துமேல
மாறாத அன்பு காட்டலன்னா,
அந்த தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கும்?
இன்னைக்கு நாமகூட, சகோதர சகோதரிகள்மேல
மாறாத அன்ப காட்டணும்னு யெகோவா எதிர்பார்க்குறார்.
அவங்கள்ல யாராவது உங்க மனச கஷ்டப்படுத்திட்டா,
பதிலுக்கு பதில் செய்யணும்னு உங்களுக்கு தோணலாம்,
இல்லன்னா அவங்கள பத்தி மத்தவங்ககிட்ட
குறை சொல்லணும்னு தோணலாம்.
ஆனா, அப்படியெல்லாம் செய்யாதீங்க.
அவங்களோட சமாதானம் ஆகுறதுக்கு
எல்லா முயற்சியும் எடுங்க.
நம்ம சகோதர சகோதரிகள்மேல
யெகோவா அன்பு காட்டுறாரு.
அப்படின்னா, நாமளும் அவங்கமேல
மாறாத அன்ப காட்டணும், இல்லையா?
இந்த பதிவுல,
மாறாத அன்ப காட்டுனதுல
சிறந்த உதாரணம் யெகோவாதான்.
யோசேப்ப அவரோட குடும்பத்துல
இருந்தவங்களே கைவிட்டுட்டாங்க,
அவரோட முதலாளியோட மனைவி
அவர்மேல பொய்க் குற்றம் சுமத்துனாங்க,
கடைசில அவர சிறையில தள்ளிட்டாங்க.
ஆனாலும், ‘யெகோவா யோசேப்புகூடவே இருந்தாரு.
அவர கைவிடாம மாறாத அன்ப
எப்பவும் காட்டுனாரு.’
ஏன்?
யோசேப்பு தனக்கு உண்மையா
இருக்கறத பார்த்தாரு,
அதனால அவரும் யோசேப்புக்கு
உண்மையா இருந்தாரு.
யெகோவா யோசேப்ப நடத்துன விதம்,
இஸ்ரவேல் தேசத்துமேலயும் அவருக்கு
மாறாத அன்பு இருந்தத காட்டுது.
யெகோவா யோசேப்ப பயன்படுத்தி
அவரோட குடும்பத்த காப்பாத்துறதன் மூலமா,
மேசியாவோட வம்சாவளிய பாதுகாத்தாரு.
அதோட, இஸ்ரவேலர்கள
விடுதலை பண்ணப்போறதா கொடுத்த வாக்க
சரியான சமயத்துல நிறைவேத்துனாரு.
இத கேட்கவே ஆறுதலா இருக்குல?
மனுஷங்க வேணா உங்கள கைவிடலாம்,
கேலி செய்யலாம்,
உங்கள பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லலாம்,
உங்கள அநியாயமாக்கூட நடத்தலாம்.
ஆனா, நீங்க யெகோவாவுக்கு உண்மையா இருந்தா
அவரு உங்கள கைவிடவே மாட்டாரு.
அன்னைக்கு யோசேப்ப அவரு மறக்கவே இல்ல.
இன்னைக்கும் அவரோட உண்மை ஊழியர்கள
அவரு மறக்கவே மாட்டாரு.
அதனால, எப்பவும் யெகோவாவ கெட்டியா பிடிச்சுக்கோங்க,
அப்ப அவரு தொடர்ந்து உங்கமேல
மாறாத அன்ப காட்டுவாரு.
-