JW subtitle extractor

1 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்

Video Other languages Share text Share link Show times

ஒண்ணு கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்.
அப்போஸ்தலன் பவுல் இந்த கடிதத்த
கொரிந்து மாநகரத்துல இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுனாரு.
ரெண்டாவது மிஷனரி பயணத்தப்போ
பவுல் கொரிந்துவுல தங்கி,
அங்க ஒரு சபை உருவாகறதுக்கு உதவுனாரு.
மூணாவது மிஷனரி பயணத்தப்போ, அநேகமா எபேசுல இருந்தப்போ,
கொரிந்து சபையில இருந்து அவருக்கு கடிதம் வந்துச்சு.
அங்க கெட்ட விஷயங்கள் நடக்குறதா செய்திகளும் வந்துச்சு.
கிட்டத்தட்ட கி.பி. 55-ல
இத பத்தியெல்லாம் பவுல் கொரிந்தியர்களுக்கு கடிதம் எழுதுனாரு.
ஒண்ணு கொரிந்தியர் புத்தகத்துல 16 அதிகாரங்கள் இருக்கு.
முதல் நாலு அதிகாரங்கள்ல,
சபைல எந்த பிரிவினையும் இருக்க கூடாதுன்னும்,
எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னும் பவுல் சொன்னாரு.
அப்புறம், யார் நடுறாங்க,
யார் தண்ணி ஊத்தறாங்க-ங்கறது எல்லாம் முக்கியம் இல்ல,
ஏன்னா கடவுள்தான் வளர வைக்குறார்னு விளக்குனாரு.
5, 6 அதிகாரங்கள்ல,
பாலியல் முறைகேடு சம்பந்தமா பவுல் அறிவுரை தந்தாரு.
மனம் திருந்தாம பாவம் செஞ்சிட்டிருந்த ஒருத்தன் அந்த சபையில இருந்தான்.
சபைய பாதுகாக்கறதுக்காக அவனை சபையிலிருந்து நீக்கணும்னு பவுல் சொன்னாரு.
பாலியல் முறைகேட்டுல இருந்து விலகி ஓடணும்னுகூட சபைக்கு எழுதுனாரு.
7-வது அதிகாரத்துல,
கல்யாணம் பண்ணாம இருக்கறவங்களுக்கும் சரி,
பண்றவங்களுக்கும் சரி, பவுல் ஆலோசனை தர்றாரு.
அதிகாரங்கள் 8-ல இருந்து 10-ல பவுல் எத பத்தி சொல்றாருன்னா,
சில விஷயங்கள செய்ய நமக்கு உரிமை இருந்தாலும்,
சபையில இருக்கறவங்களுக்கோ மத்தவங்களுக்கோ அது ஒரு தடைக்கல்லா இருந்தா
அத நாம விட்டுக்கொடுக்கணும்.
உங்களுக்கு தெரியுமா?
கொரிந்துவுல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ இஸ்த்மியன் விளையாட்டுப் போட்டி நடந்துச்சு.
அதனால, கொரிந்தியர்களுக்கு நல்லா தெரிஞ்சிருந்த ஓட்டப்பந்தயத்த பவுல் உதாரணமா சொல்லி,
கடைசிவரை உண்மையா இருக்குறதும், சகிச்சிருக்குறதும்
எவ்ளோ முக்கியங்கறத அவங்களுக்கு புரியவைச்சாரு.
11-வது அதிகாரத்துல,
எஜமானோட இரவு விருந்து சம்பந்தமா பவுல் அறிவுரைகள் கொடுத்தாரு.
12-வது அதிகாரத்துல,
சபைய மனுஷங்களோட உடம்புக்கு ஒப்பிட்டு பவுல் பேசுறாரு.
இப்படி, ஒவ்வொரு உறுப்பும் முக்கியங்கறத காட்டுறாரு.
நாம ஒற்றுமையா வேல செஞ்சா யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவாரு.
13-வது அதிகாரத்துல,
அன்பு எப்படியெல்லாம் நடந்துக்கும்,
எப்படியெல்லாம் நடந்துக்காதுன்னு சொல்றாரு.
14-வது அதிகாரத்துல,
சபை கூட்டங்கள் ஒழுங்காவும் கண்ணியமாவும் நடக்கணும்னு விளக்குறாரு.
15-வது அதிகாரத்துல,
உயிர்த்தெழுதல் கண்டிப்பா நடக்குங்குற உறுதிய பவுல் தர்றாரு.
இயேசுவோட உயிர்த்தெழுதல பத்தின தீர்க்கதரிசனம் நிறைவேறுனதாவும்...
அதுக்கு கண்கண்ட சாட்சிகள் இருந்ததாவும் அவரு சொல்றாரு.
இயேசுவோட மீட்பு பலி மூலமா
பாவமும் மரணமும் ஒழிக்கப்படுன்னும் அவரு விளக்குறாரு.
16-வது அதிகாரத்துல,
எருசலேம்ல வறுமையில இருந்த கிறிஸ்தவர்களுக்காக
நன்கொடை திரட்டுறத பத்தி பவுல் ஆலோசனை தர்றாரு.
ஒண்ணு கொரிந்தியர் புத்தகத்த படிக்குறப்போ,
உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி ஒற்றுமையா இருக்கணும்னும்,
சபை எப்படி யெகோவாவோட ஒழுக்க தராதரங்கள கடைப்பிடிக்கணும்னும்,
கடவுளோட அரசாங்கத்துல வாழ
இயேசுவோட உயிர்த்தெழுதல்ல நம்பிக்கை வைக்குறது ஏன் முக்கியம்னும் தெரிஞ்சுக்குவீங்க.