00:00:01
2 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்.00:00:05
00:00:06
பவுல் கொரிந்தியர்களுக்கு
தன்னோட முதல் கடிதத்த எழுதி00:00:09
00:00:09
சில மாசங்களுக்கு அப்புறம் 2-வது கடிதத்த எழுதுனாரு.00:00:13
00:00:15
தீத்து யூதேயாவுல இருந்தவங்களுக்காக நன்கொடை திரட்டுற
வேலைக்கு உதவ கொரிந்துக்கு அனுப்பப்பட்டிருந்தாரு.00:00:22
00:00:22
முதல் கடிதத்துல பவுல் கொடுத்த
ஆலோசனைகள கொரிந்தியர்கள்00:00:25
00:00:25
ஏத்துக்குறாங்களான்னு பார்க்கவும்
அவர் அனுப்பப்பட்டிருக்கலாம்.00:00:28
00:00:28
தீத்து கொரிந்துவுல இருந்து கிளம்பி
பவுல பார்க்க வந்தாரு.00:00:32
00:00:32
கொரிந்தியர்கள பத்தி தீத்து
நல்ல செய்திய கொண்டுவந்ததுனால,00:00:35
00:00:35
பவுல் சந்தோஷப்பட்டு, அவங்களுக்கு
இன்னொரு கடிதத்த எழுதுனாரு.00:00:40
00:00:40
2 கொரிந்தியர் புத்தகத்துல 13 அதிகாரங்கள் இருக்கு.00:00:45
00:00:45
முதல் அதிகாரத்துல, யெகோவா “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்.00:00:49
00:00:49
எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.00:00:51
00:00:51
நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும்
அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்”னு பவுல் சொன்னாரு.00:00:56
00:00:56
2-வது அதிகாரத்துல, கொரிந்தியர்கள்மேல
தான் அன்பு வைச்சிருக்குறதா பவுல் உறுதியளிக்குறாரு.00:01:02
00:01:02
ஏன்னா, முதல் கடிதத்துல அவங்களுக்கு
கடுமையான ஆலோசனை கொடுத்திருந்தாரு.00:01:07
00:01:07
சபையிலிருந்து நீக்கப்பட்டவர் மனந்திருந்தி
தன்னை மாத்திக்கிட்டதுனால00:01:12
00:01:12
அவர மன்னிச்சு மறுபடியும் சபைல
ஏத்துக்கணும்னு சொன்னாரு.00:01:16
00:01:16
3-வது அதிகாரத்துல, கடவுள்தான் தன்னோட ஊழியர்களுக்கு
போதிய தகுதிய கொடுக்குறாருன்னு பவுல் எழுதுனாரு.00:01:23
00:01:25
4-வது அதிகாரத்துல, நாம செய்ற ஊழியத்த00:01:29
00:01:29
‘மண்பாத்திரங்கள்ல இருக்குற பொக்கிஷம்’னு
அவரு விளக்குறாரு.00:01:32
00:01:32
நாம சாதாரண மண்பாத்திரங்களா இருந்தாலும்,00:01:36
00:01:36
நாம சொல்ற செய்தி நமக்கும்
நம்ம செய்திய கேட்குறவங்களுக்கும்00:01:40
00:01:40
முடிவில்லாத வாழ்க்கைய கொடுக்கும்.00:01:43
00:01:43
5-வது அதிகாரத்துல, ‘கிறிஸ்துவோட அன்பு
நம்மள தூண்டியெழுப்புது’னு பவுல் சொல்றாரு.00:01:50
00:01:50
கிறிஸ்து நம்மமேல எந்தளவுக்கு
அன்பு காட்டுனாருன்னு புரிஞ்சுகிட்டா,00:01:53
00:01:53
அவருக்காக வாழ ஆசைப்படுவோம்.00:01:56
00:01:56
அவரோட முன்மாதிரிய பின்பற்றவும் தூண்டப்படுவோம்.00:02:00
00:02:01
6-வது அதிகாரத்துல, ஒரு உண்மை கிறிஸ்தவர்
விசுவாசியா இல்லாத ஒருத்தரோட பிணைக்கப்படுறது00:02:07
00:02:07
பொருத்தமா இருக்காதுனும்00:02:09
00:02:09
அது அந்த கிறிஸ்தவரோட விசுவாசத்த
அழிச்சிடும்னும் பவுல் சொல்றாரு.00:02:14
00:02:15
7-வது அதிகாரத்துல,
கடவுளுக்கு ஏற்ற வருத்தத்துக்கும்00:02:19
00:02:19
உலக மக்கள் மாதிரி வருத்தப்படுறதுக்கும்
இருக்குற வித்தியாசத்த சொல்றாரு.00:02:23
00:02:23
தப்பு செய்றது கடவுளுக்கு விரோதமான
பாவம்னு ஒருத்தர் புரிஞ்சுக்குறப்போ00:02:27
00:02:27
கடவுளுக்கு ஏத்த விதத்துல வருத்தப்படுறாரு.00:02:30
00:02:30
மன்னிப்பு கேட்குறதுக்கும் தன்னை மாத்திக்கறதுக்கும்
இது அவருக்கு உதவுது.00:02:34
00:02:35
உலக மக்கள் மாதிரி வருத்தப்படுறது வேற.00:02:38
00:02:38
அப்படி வருத்தப்படுற ஒருத்தர், தான் செஞ்ச தப்பு
எல்லார்க்கும் தெரிஞ்சிடுச்சேன்னு வருத்தப்படலாம்.00:02:43
00:02:43
ஆனா கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு
நினைக்கவே மாட்டாரு.00:02:47
00:02:49
அதிகாரங்கள் 8, 9-ல00:02:51
00:02:51
யூதேயாவுல கஷ்டத்துல இருக்குற சகோதரர்களுக்கு
தொடர்ந்து நிவாரண உதவி செய்யச்சொல்லி00:02:56
00:02:56
பவுல் கொரிந்தியர்களுக்கு சொன்னாரு.00:02:59
00:03:02
உங்களுக்கு தெரியுமா?00:03:04
00:03:04
பிரசங்க வேலையயும்
கத்துக்கொடுக்குற வேலையயும் குறிக்குறதுக்கு00:03:08
00:03:08
பவுல் எந்த கிரேக்க வார்த்தைய பயன்படுத்துனாரோ00:03:10
00:03:10
அதே வார்த்தையதான்
நிவாரண வேலைக்கும் பயன்படுத்துனாரு.00:03:14
00:03:14
அதனால, நிவாரண வேலையும் யெகோவாவுக்கு
நாம செய்ற பரிசுத்த சேவைதான்.00:03:20
00:03:20
அதிகாரங்கள் 10-13-ல, போலி அப்போஸ்தலர்களோட
போதனைகள் ஏன் தப்புன்னு பவுல் சொன்னாரு.00:03:28
00:03:29
பைபிள் சத்தியம், ‘ஆழமா
வேரூன்றியிருக்கிற’ கோட்பாடுகளயும்00:03:34
00:03:34
பழக்கவழக்கங்களயும் மனப்பான்மைகளயும்00:03:37
00:03:37
தகர்த்தெறியுற அளவுக்கு சக்திபடைச்சதுன்னு
பவுல் சொன்னாரு.00:03:41
00:03:44
2 கொரிந்தியர் புத்தகத்த படிக்குறப்போ,00:03:46
00:03:46
யெகோவா எப்படி தன்னோட ஊழியர்கள
பலப்படுத்தி காப்பாத்துறாருன்னும்,00:03:52
00:03:52
உண்மையா மனம் திருந்துறவங்க எப்படி
கடவுளோட நண்பரா இருக்க முடியும்னும்,00:03:57
00:03:57
சாதாரண மனுஷங்ககூட எப்படி கடவுளோட அரசாங்கத்த பத்தி
பிரசங்கிக்க முடியும்னும் தெரிஞ்சுக்குவீங்க.00:04:03
2 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்
-
2 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்
2 கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம்.
பவுல் கொரிந்தியர்களுக்கு
தன்னோட முதல் கடிதத்த எழுதி
சில மாசங்களுக்கு அப்புறம் 2-வது கடிதத்த எழுதுனாரு.
தீத்து யூதேயாவுல இருந்தவங்களுக்காக நன்கொடை திரட்டுற
வேலைக்கு உதவ கொரிந்துக்கு அனுப்பப்பட்டிருந்தாரு.
முதல் கடிதத்துல பவுல் கொடுத்த
ஆலோசனைகள கொரிந்தியர்கள்
ஏத்துக்குறாங்களான்னு பார்க்கவும்
அவர் அனுப்பப்பட்டிருக்கலாம்.
தீத்து கொரிந்துவுல இருந்து கிளம்பி
பவுல பார்க்க வந்தாரு.
கொரிந்தியர்கள பத்தி தீத்து
நல்ல செய்திய கொண்டுவந்ததுனால,
பவுல் சந்தோஷப்பட்டு, அவங்களுக்கு
இன்னொரு கடிதத்த எழுதுனாரு.
2 கொரிந்தியர் புத்தகத்துல 13 அதிகாரங்கள் இருக்கு.
முதல் அதிகாரத்துல, யெகோவா “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்.
எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.
நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும்
அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்”னு பவுல் சொன்னாரு.
2-வது அதிகாரத்துல, கொரிந்தியர்கள்மேல
தான் அன்பு வைச்சிருக்குறதா பவுல் உறுதியளிக்குறாரு.
ஏன்னா, முதல் கடிதத்துல அவங்களுக்கு
கடுமையான ஆலோசனை கொடுத்திருந்தாரு.
சபையிலிருந்து நீக்கப்பட்டவர் மனந்திருந்தி
தன்னை மாத்திக்கிட்டதுனால
அவர மன்னிச்சு மறுபடியும் சபைல
ஏத்துக்கணும்னு சொன்னாரு.
3-வது அதிகாரத்துல, கடவுள்தான் தன்னோட ஊழியர்களுக்கு
போதிய தகுதிய கொடுக்குறாருன்னு பவுல் எழுதுனாரு.
4-வது அதிகாரத்துல, நாம செய்ற ஊழியத்த
‘மண்பாத்திரங்கள்ல இருக்குற பொக்கிஷம்’னு
அவரு விளக்குறாரு.
நாம சாதாரண மண்பாத்திரங்களா இருந்தாலும்,
நாம சொல்ற செய்தி நமக்கும்
நம்ம செய்திய கேட்குறவங்களுக்கும்
முடிவில்லாத வாழ்க்கைய கொடுக்கும்.
5-வது அதிகாரத்துல, ‘கிறிஸ்துவோட அன்பு
நம்மள தூண்டியெழுப்புது’னு பவுல் சொல்றாரு.
கிறிஸ்து நம்மமேல எந்தளவுக்கு
அன்பு காட்டுனாருன்னு புரிஞ்சுகிட்டா,
அவருக்காக வாழ ஆசைப்படுவோம்.
அவரோட முன்மாதிரிய பின்பற்றவும் தூண்டப்படுவோம்.
6-வது அதிகாரத்துல, ஒரு உண்மை கிறிஸ்தவர்
விசுவாசியா இல்லாத ஒருத்தரோட பிணைக்கப்படுறது
பொருத்தமா இருக்காதுனும்
அது அந்த கிறிஸ்தவரோட விசுவாசத்த
அழிச்சிடும்னும் பவுல் சொல்றாரு.
7-வது அதிகாரத்துல,
கடவுளுக்கு ஏற்ற வருத்தத்துக்கும்
உலக மக்கள் மாதிரி வருத்தப்படுறதுக்கும்
இருக்குற வித்தியாசத்த சொல்றாரு.
தப்பு செய்றது கடவுளுக்கு விரோதமான
பாவம்னு ஒருத்தர் புரிஞ்சுக்குறப்போ
கடவுளுக்கு ஏத்த விதத்துல வருத்தப்படுறாரு.
மன்னிப்பு கேட்குறதுக்கும் தன்னை மாத்திக்கறதுக்கும்
இது அவருக்கு உதவுது.
உலக மக்கள் மாதிரி வருத்தப்படுறது வேற.
அப்படி வருத்தப்படுற ஒருத்தர், தான் செஞ்ச தப்பு
எல்லார்க்கும் தெரிஞ்சிடுச்சேன்னு வருத்தப்படலாம்.
ஆனா கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு
நினைக்கவே மாட்டாரு.
அதிகாரங்கள் 8, 9-ல
யூதேயாவுல கஷ்டத்துல இருக்குற சகோதரர்களுக்கு
தொடர்ந்து நிவாரண உதவி செய்யச்சொல்லி
பவுல் கொரிந்தியர்களுக்கு சொன்னாரு.
உங்களுக்கு தெரியுமா?
பிரசங்க வேலையயும்
கத்துக்கொடுக்குற வேலையயும் குறிக்குறதுக்கு
பவுல் எந்த கிரேக்க வார்த்தைய பயன்படுத்துனாரோ
அதே வார்த்தையதான்
நிவாரண வேலைக்கும் பயன்படுத்துனாரு.
அதனால, நிவாரண வேலையும் யெகோவாவுக்கு
நாம செய்ற பரிசுத்த சேவைதான்.
அதிகாரங்கள் 10-13-ல, போலி அப்போஸ்தலர்களோட
போதனைகள் ஏன் தப்புன்னு பவுல் சொன்னாரு.
பைபிள் சத்தியம், ‘ஆழமா
வேரூன்றியிருக்கிற’ கோட்பாடுகளயும்
பழக்கவழக்கங்களயும் மனப்பான்மைகளயும்
தகர்த்தெறியுற அளவுக்கு சக்திபடைச்சதுன்னு
பவுல் சொன்னாரு.
2 கொரிந்தியர் புத்தகத்த படிக்குறப்போ,
யெகோவா எப்படி தன்னோட ஊழியர்கள
பலப்படுத்தி காப்பாத்துறாருன்னும்,
உண்மையா மனம் திருந்துறவங்க எப்படி
கடவுளோட நண்பரா இருக்க முடியும்னும்,
சாதாரண மனுஷங்ககூட எப்படி கடவுளோட அரசாங்கத்த பத்தி
பிரசங்கிக்க முடியும்னும் தெரிஞ்சுக்குவீங்க.
-