JW subtitle extractor

நல்ல பிள்ளையா ஊழியம் செய்!

Video Other languages Share text Share link Show times

ஊழியத்துக்கு போக டைம் ஆயிடுச்சு, இல்ல?
கேலப், நீ ரெடியா?
நீ ரெடி ஆன மாதிரி தெரியலயே.
சரி, ஊழியத்துக்கு போறதுக்கு முன்னாடி நாம சில விஷயங்கள தெரிஞ்சுக்கணும்
முக்கியமா மூணு விஷயங்கள தெரிஞ்சுக்கணும்
மூணு விஷயமா?
ஆமா!
நல்லா தயாரிக்கணும்,
நீட்டா டிரெஸ் பண்ணணும்,
ஒழுங்கா நடந்துக்கணும்
முதல்ல, நல்லா தயாரிக்கணும்
நல்லா ஊழியம் செய்யணும்னா நல்லா தயாரிக்கணும்
எந்த வேலைய செய்யணும்னாலும், அதுக்கு ஏத்த கருவிகள் வேணும்
நம்மகிட்டயும் ஏகப்பட்ட கருவிகள் இருக்கு
எத பயன்படுத்துறதுனு தெரியலையா?
கவலப்படாத
ஊழியத்துக்குன்னே சில முக்கியமான கருவிகள் இருக்கு
அதுல ஒண்ண கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி
அத கண்டுபிடிச்சதுக்கு அப்புறம்,
என்ன பேசறதுன்னு நல்லா தயாரிச்சுட்டுத்தான் ஊழியத்துக்கு போகணும்
அங்க போய் தயாரிச்சா நல்லா இருக்காதுல?
இப்போ நீ தயாரிச்சாச்சு
அடுத்த விஷயம் என்ன?
நீட்டா டிரெஸ் பண்ணணும்
நாம யெகோவாவ பத்தி பேச போறதுனால,
சரியா டிரெஸ் பண்றது ரொம்ப முக்கியம்
ஊழியத்துக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி நாம டிரெஸ் பண்ண கூடாது
சுத்தமாவும், அடக்கமாவும் டிரெஸ் பண்ணாத்தான் யெகோவா அப்பாக்கு பிடிக்கும்
அப்படின்னா, நாம அழுக்கா இல்லாம நீட்டா இருக்கணும்
நம்ம டிரெஸ் லூசா இருக்க கூடாது,
ரொம்ப டைட்டாவும் இருக்க கூடாது
நம்ம தலை கலஞ்சிருக்க கூடாது
எல்லாரும் நம்மளயே பார்க்கற மாதிரியும் டிரெஸ் பண்ண கூடாது
சூப்பரா இருக்க கேலப்!
இப்போ மூணாவது விஷயத்துக்கு வரலாம்
ஊழியத்துல ஒழுங்கா நடந்துக்கணும்
ஊழியத்துல ஒழுங்கா நடந்துக்கிட்டா மத்தவங்க யெகோவாவ புகழ்ந்து பேசுவாங்க
அதனால ஊழியத்துல நல்ல பிள்ளையா நடந்துக்கோ
சத்தமா பேசுறது, சிரிக்கிறது...
ஓடியாடி விளையாடுறது...
மத்தவங்க பொருள தொடுறது...
அவங்க வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்குறது...
அங்க நின்னு சாப்பிடுறது...
இதெல்லாம் செய்ய கூடாது
நாம ஊழியம் செய்யறப்போ
சுத்தியிருக்கிறவங்க நம்மள பார்ப்பாங்க
நாம ஒழுங்கா நடந்துக்கிட்டா,
அவங்க யெகோவாவ பத்தி தெரிஞ்சிக்க ஆசப்படுவாங்க
அதனால நம்ம ஊழியத்த பத்தி யாரும் குறை சொல்லாத மாதிரி நாம நடந்துக்கணும்
இப்ப நான் ஊழியத்துக்கு போலாமா?
கண்டிப்பா!
அதுக்கு முன்னாடி,
கத்துக்கிட்ட மூணு விஷயத்தையும் மனசுல வெச்சு ஊழியம் செஞ்சு பாக்கலாமா?
குட் மார்னிங்
என் பேர் கேலப். உங்க பேரு?
ஹாய் கேலப்
என் பேரு...